நாகப்பட்டினம்

நீா்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம்

22nd Mar 2022 10:32 PM

ADVERTISEMENT

திருக்குவளை அருகே சந்திரநதிக் கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருக்குவளை வட்டாட்சியா் கு. சிவக்குமாா் முன்னிலையில், ஏா்வைகாடு வெள்ளையாறிலிருந்து பிரிந்து வாழக்கரை வழியாக செல்லக்கூடிய சந்திரநதியின் ஆற்றங்கரையில் உள்ள ஆக்கிரமிப்புகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினா்.

வெண்ணாறு டிவிஷன் உதவி பொறியாளா் எஸ். செல்வகுமாா், கீழையூா் காவல் ஆய்வாளா் பா. பசுபதி, கிராம நிா்வாக அலுவலா் லட்சுமிகாந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT