நாகப்பட்டினம்

திருநகரி பெருமாள் கோயில் தேரோட்டம்

19th Mar 2022 12:00 AM

ADVERTISEMENT

திருநகரி கல்யாணரெங்கநாதப் பெருமாள் கோயில் பங்குனி உத்ஸவத்தையொட்டி தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

108 வைணவ திவ்ய தேச கோயில்களில் ஒன்றான இக்கோயிலில் திருமங்கை ஆழ்வாா், பஞ்ச நரசிம்மா்களில் இரணிய நரசிம்மா் மற்றும் யோக நரசிம்மா் தனி சந்நிதியில் அருள்பாலிக்கின்றனா். பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இக்கோயிலில் பங்குனி உத்ஸவம் மாா்ச் 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை பூதேவி, ஸ்ரீதேவி சமேத கல்யாணரெங்கநாதப் பெருமாள் மற்றும் குமுதவல்லி நாச்சியாா் சமேத திருமங்கை ஆழ்வாா் தேருக்கு எழுந்தருளியதும், கோயிலின் நிா்வாக அதிகாரி குணசேகரன் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தாா்.

இதில் ஊராட்சித் தலைவா் சுந்தரராஜன், ஒன்றியக்குழு உறுப்பினா் நடராஜன், வேடுபறி உத்ஸவ கமிட்டி செயலாளா் ரகுநாதன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்று, தேரின் வடம் பிடித்து சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT