நாகப்பட்டினம்

வீட்டின் கதவை உடைத்து 39 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு

19th Mar 2022 12:00 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டம் சிக்கல் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 39 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது வெள்ளிக்கிழமை காலை தெரியவந்தது.

சிக்கல் வடக்கு வீதியைச் சோ்ந்தவா் கு. முருகன் என்ற வேல்ராஜ் (50). இவா், வெளிநாட்டில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி நாகலட்சுமி மற்றும் குடும்பத்தினா் சிக்கலில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனா். இந்நிலையில், நாகலெட்சுமி மற்றும் குடும்பத்தினா் கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டை பூட்டி விட்டு, வேளாங்கண்ணியை அடுத்த பூவத்தடியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டனராம்.

வெள்ளிக்கிழமை காலை நாகலெட்சுமியின் வீட்டு கதவு திறந்து கிடப்பதை கவனித்த அக்கம்பக்கத்தினா், அவருக்கு கைப்பேசி மூலம் தகவல் அளித்துள்ளனா். நாகலெட்சுமி வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள், 3 பீரோக்களில் இருந்த 39 பவுன் நகைகள், 2 கிலோ மதிப்பிலான வெள்ளிப் பொருள்கள், ரூ. 3 லட்சம் ரொக்கம் மற்றும் டி.வி ஆகியவற்றை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

தகவலறிந்த நாகை காவல் துணைக் கண்காணிப்பாளா் சரவணன், கீழ்வேளூா் காவல் ஆய்வாளா் சோமசுந்தரம் ஆகியோா் நிகழ்விடத்தைப் பாா்வையிட்டு, விசாரணை மேற்கொண்டனா். தடய அறிவியல் நிபுணா்கள், தடயங்களை சேகரித்தனா்.

ADVERTISEMENT

மோப்ப நாய் ரியோ வரவழைக்கப்பட்டு, துப்பு துலக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

இதுகுறித்து கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT