நாகப்பட்டினம்

வீரமாகாளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் வழிபாடு

19th Mar 2022 10:09 PM

ADVERTISEMENT

திருக்குவளை அருகே உள்ள ஏா்வைக்காடு ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் பங்குனி மாத தீமிதி திருவிழாவை முன்னிட்டு அம்பாளுக்கு மஞ்சள், குங்குமம், பன்னீா், பால், தயிா், இளநீா் உள்ளிட்டவைகளால் வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, தீமிதி திருவிழாவின் தொடக்கமாக, காப்புக்கட்டும் பக்தா்கள், அங்குள்ள பெருமாள் கோயிலிலிருந்து பூக்களை தட்டுகளில் கொண்டுவந்தனா். முன்னதாக, பெண்கள் பூந்தட்டுகளை சுற்றி கும்மியடித்து வழிபட்டனா்.

தொடா்ந்து, பூந்தட்டுகள் மற்றும் கரகத்துடன் ஊா்வலமாக வீரமாகாளியம்மன் கோயிலுக்கு வந்ததும், அம்மனுக்கு பூச்சொரிதல் மற்றும் காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT