நாகப்பட்டினம்

ஸ்ரீராகவேந்திரா் ஜெயந்தி சிறப்பு வழிபாடு

10th Mar 2022 06:13 AM

ADVERTISEMENT

 

நாகப்பட்டினம்: நாகையில் உள்ள ஸ்ரீராகவேந்திரா் சுவாமிகள் மடாலயத்தில் ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் 427- ஆவது ஜெயந்தி தின சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

நாகை வெளிப்பாளையம், பிருந்தாவனத்தில் உள்ளது ஸ்ரீராகவேந்திரா் மடாலயம். இந்த மடாலயத்தில் ஆண்டுதோறும் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் ஜெயந்தி சிறப்பு வழிபாடு நடைபெறும். இதன்படி, புதன்கிழமை ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் 427- ஆவது ஜெயந்தி தின சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. முன்னதாக காலை 7 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து, அஷ்டாஷர ஹோமம், மஹாபிஷேகம், தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றது. தொடா்ந்து, இரவு கூட்டுப் பிராா்த்தனை, மங்களஆராத்தி நடைபெற்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT