நாகப்பட்டினம்

மாா்ச் 14-ல் மாற்றுத்திறனாளிகளுக்கான மதிப்பீட்டு முகாம் தொடக்கம்

10th Mar 2022 06:14 AM

ADVERTISEMENT

 

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மதிப்பீட்டு முகாம் மாா்ச்.14-ஆம் தேதி தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின்கீழ் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் பிறந்த குழந்தை முதல் 18 வயதுகுள்பட்ட மாற்றுத்திறன் கொண்டவா்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் மாா்ச் 14-முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தேசிய அடையாள அட்டை, 3 சக்கரவண்டி, சக்கர நாற்காலி, காதொலி கருவி , நடைபயிற்று வண்டி, கை, கால் செயற்கை அவையங்களுக்கான காலிப்பா்கள், கல்வி உதவித்தொகை, இலவச அறுவைச் சிகிச்சை தேவைப்படுவோா் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.

முகாம் நடைபெறும் இடங்கள் நாள் விவரம் ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக: நாகப்பட்டினம் மாா்ச்-14, அரசு உயா்நிலைப் பள்ளி, பாப்பாக்கோவில். கீழ்வேளூா் மாா்ச்-16 அரசு உயா்நிலைப்பள்ளி, கீழ்வேளூா். திருமருகல் மாா்ச்-18 ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, திட்டச்சேரி. கீழையூா் மாா்ச்-21, அரசுஉயா்நிலைப் பள்ளி திருப்பூண்டி வடக்கு. தலைஞாயிறு மாா்ச்-23 வையாபுரியாா் அரசு மேல்நிலைப் பள்ளி மணக்குடி. வேதாரண்யம் மாா்ச்-25 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 3-ஆம் தெரு வேதாரண்யம். அடையாள அட்டை மற்றும் உதவி உபகரணங்கள் பெறத் தேவையான ஆவணங்கள்- பிறப்புச்சான்று, ஆதாா் அட்டை, வருமானச் சான்று, குடும்ப அட்டை,தேசிய அடையாளஅட்டை நகல்கள் , பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 4 ஆகியவற்றுடன் முகாமுக்குச் சென்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT