நாகப்பட்டினம்

கிழக்கு சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றம்

10th Mar 2022 06:08 AM

ADVERTISEMENT

 

நாகப்பட்டினம்: நாகை கிழக்கு சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர பிரமோத்ஸவ ஆராட்டு விழா கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பிரமோத்ஸவ விழா நடைபெறும். நிகழாண்டில் இவ்விழா, மாா்ச் 8 முதல் 18- ஆம் தேதி வரைநடைபெறுகிறது. இதையொட்டி, செவ்வாய்க்கிழமை கருப்பண்ணசாமி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதன் தொடா்ச்சியாக புதன்கிழமை காலை 11 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து மணிகண்டனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மாா்ச்-18 ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் நாகை சட்ட நாதா் தீா்த்தத்தில் மணிகண்டன் ஆராட்டு வைபமும், மாலை 6 மணிக்கு மேல் வீதியுலாவும் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT