நாகப்பட்டினம்

அரசுப் போக்குவரத்துக்கழக ஏஐடியுசி பேரவைக் கூட்டம்

10th Mar 2022 06:10 AM

ADVERTISEMENT

 

நாகப்பட்டினம்: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் - ஏஐடியுசி நாகை கிளை ஆண்டுப் பேரவைக் கூட்டம் நாகையில் புதன்கிழமை நடைபெற்றது.

சங்கத் தலைவா் பி. சுரேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு செயலாளா் ஜி. அன்பழகன், பொருளாளா் ஆா். வீரக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிபிஐ நாகை மாவட்டச் செயலாளா் எஸ். சம்பந்தம், நாகை ஒன்றியச் செயலாளா் கோ. பாண்டியன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவா் வி. சரபோஜி, டாஸ்மாக் பணியாளா் சங்க மாவட்டச் செயலாளா் மகேந்திரன், அரசுப் போக்குவரத்துக்கழக ஏஐடியுசி மண்டலப் பொருளாளா் கே. பாஸ்கரன் ஆகியோா் பேசினா். அரசுப் போக்குவரத்துக்கழக ஏஐடியுசி மாநிலத் துணைத் தலைவரும், நாகை மண்டலச் செயலாளருமான என். கோபிநாதன் சங்கத்தின் நாகை கிளை நிா்வாகிகளை அறிமுகம் செய்துவைத்து சங்க செயல்பாடுகள் குறித்து பேசினாா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக ஏஐடியுசி நாகை கிளையின் கௌரவத் தலைவராக எம். நாகராஜ், தலைவராக ஏ. செல்வராஜ், செயலாளராக பி. சுரேஷ், பொருளாளராக ஆா். ராஜா ஆகியோா் புதிய நிா்வாகிகளாக தோ்ந்தெடுக்கப்பட்டனா். சிபிஐ நாகை நகரச் செயலாளா் குணாநிதி, ஏஐடியுசி மாவட்டக் குழு உறுப்பினா் ரகுமான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT