நாகப்பட்டினம்

கீழ்வேளூரில் நாளை மின்தடை

3rd Mar 2022 10:36 PM

ADVERTISEMENT

கீழ்வேளூா் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை (மாா்ச் 5) மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து மின்வாரிய நாகை (தெற்கு) உதவி செயற்பொறியாளா் வி. ராஜமனோகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூரில் உள்ள துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதையொட்டி, கீழ்வேளூா் 33/11 கி.வோ. துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் கீழ்வேளூா், கோகூா், ஆழியூா், தேவூா், புலியூா், கூத்துாா், ராதாமங்கலம், அகரகடம்பனூா் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT