நாகப்பட்டினம்

திட்டச்சேரி: திமுகவில் இணைந்த அதிமுக வாா்டு உறுப்பினா்

3rd Mar 2022 06:07 AM

ADVERTISEMENT

 

திருமருகல்: திட்டச்சேரி பேரூராட்சி 14- வது வாா்டு உறுப்பினா் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் புதன்கிழமை இணைந்தாா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சி 14- வது வாா்டில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் கஸ்தூரி கலியபெருமாள். இவா் மற்றும் இவரது குடும்பத்தினா் அதிமுகவிலிருந்து விலகி, தமிழக மீன் வளா்ச்சிக் கழகத் தலைவரும், நாகை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான என். கௌதமன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

இந்நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் இல. மேகநாதன், திருமருகல் வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் செல்வ.செங்குட்டுவன், முன்னாள் ஒன்றியச் செயலாளா் செல்வம், திட்டச்சேரி பேரூா் செயலாளா் எம்.முகம்மது சுல்தான், நாகை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளா் செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT