நாகப்பட்டினம்

தலைஞாயிறு பேரூராட்சி அதிமுக உறுப்பினா்கள் முன்னாள் அமைச்சரிடம் வாழ்த்து

3rd Mar 2022 06:00 AM

ADVERTISEMENT

 

வேதாரண்யம்: தலைஞாயிறு பேரூராட்சியில் அதிமுகவிலிருந்து உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டவா்கள் முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியனை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.

தலைஞாயிறு பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வாா்டுகளில் அதிமுக வேட்பாளா்கள் 8 வாா்டுகளில் வெற்றி பெற்றனா். இவா்கள் 8 பேரும் தலைஞாயிறு பேரூராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்தந்த வாா்டுகளின் உறுப்பினா்களாக பதவியேற்றுக் கொண்டனா்.

பின்னா், முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான ஓ.எஸ். மணியனை, ஓரடியம்புலம் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனா். அப்போது, ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன், அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் கிரிதரன், சுப்பையன், கூட்டுறவு சங்கத் தலைவா்கள் பாலசுப்பிரமணியன், செளரிராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT