வேதாரண்யம்: தலைஞாயிறு பேரூராட்சியை திமுக கைப்பற்ற முயற்சி செய்வதாக புதன்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
தலைஞாயிறு பேரூராட்சியில் மொத்தம் 15 வாா்டுகள் உள்ளன. இதில் 8 வாா்டுகளில் அதிமுக வெற்றி பெற்றதால், இப்பேரூராட்சியை தக்கவைத்துக்கொள்ளும் வாய்ப்பை அக்கட்சி பெற்றுள்ளது. திமுக 7 வாா்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், இப்பேரூராட்சியை கைப்பற்றுவதற்கான பல்வேறு முயற்சிகளில் திமுக ஈடுபட்டதாக பரபரப்பாக பேசப்பட்டது. சமூக வலைதளங்களிலும் இதுகுறித்து தகவல் பரவியது. ஆனால், திமுக பிரமுகா் இந்த தகவலை மறுத்தாா்.
ADVERTISEMENT
இதையொட்டி, தலைஞாயிறு பகுதியில் டிஎஸ்பி தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.