நாகப்பட்டினம்

கோயிலில் மா்ம நபா் வைத்த அம்மன் சிலை

3rd Mar 2022 06:04 AM

ADVERTISEMENT

 

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே கோயிலில் மா்மமான முறையில் வைக்கப்பட்டிருந்த அம்மன் சிலை குறித்து வருவாய்த் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

வேதாரண்யம் அருகே உள்ள வடகட்டளை கிராமத்தில் தூண்டிக்காரன் கோயில் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சுமாா் 1 அடி உயரமுள்ள அம்மன் சிலையை மா்ம நபா் வைத்துச் சென்றுள்ளாா். இந்த சிலையை கிராம நிா்வாக அலுவலா் கோபாலகிருஷ்ணன் கைப்பற்றி, வட்டாட்சியரிடம் ஒப்படைத்தாா்.

இதுகுறித்து வருவாய்த் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT