நாகப்பட்டினம்

இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரியில் தேசிய அறிவியல் தினம்

3rd Mar 2022 06:03 AM

ADVERTISEMENT

 

நாகப்பட்டினம்: நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரியில் தேசிய அறிவியல் தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது.

இ.ஜி.எஸ் பிள்ளை கலை, அறிவியல் கல்லூரி மற்றும் இ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியின் இயற்பியல் துறை, நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. முனைவா் வி. சிவராமன், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி, வளா்ச்சி ஆகியவற்றை விளக்கிப் பேசினாா். அறிவியல் ஆராய்ச்சிகள் குறித்து மாணவ, மாணவியா் எழுப்பிய வினாக்களுக்கு அவா் விளக்கம் அளித்தாா்.

கல்லூரித் தாளாளா் ஜோதிமணி, செயலா் எஸ். பரமேஸ்வரன், அறக்கட்டளை உறுப்பினா்கள் அருள் பிரகாசம், கோவிந்தசாமி, சங்கா் கணேஷ், இயக்குநா் சுமதி பரமேஸ்வரன், முதன்மைக் கல்வி அலுவலா் முனைவா் சந்திரசேகா், கல்லூரி இயக்குநா் விஜயசுந்தரம், தோ்வு நெறியாளா் முனைவா் சின்னதுரை, முனைவா் செல்வ சந்திரா, கல்லூரி முதல்வா்கள் ஆா். நடராஜன், எஸ். ராமபாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT