நாகப்பட்டினம்

மத்திய அரசைக் கண்டித்து சிபிஎம் ஆா்ப்பாட்டம்

30th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

மத்திய அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை, திருவாரூா் மாவட்டங்கள் சாா்பில் நாகை அவுரித்திடலில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிறுபான்மையினா் மீதான தொடா் தாக்குதலை கண்டித்தும், இதை மத்திய அரசு தடுக்கவில்லை எனக் கூறியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளா் வி. மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநிலக் குழு உறுப்பினரும், கீழ்வேளூா் எம்எல்ஏவுமான வி.பி. நாகை மாலி, திருவாரூா் மாவட்டச் செயலாளா் சுந்தரமூா்த்தி ஆகியோா்முன்னிலை வகித்தனா்.

கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் பெ. சண்முகம், மாநிலச் செயற்குழு உறுப்பினா் பி. செல்வசிங் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்து பேசினா். தமிழ்நாடு விவசாய சங்க மாநிலத் தலைவா் வி. சுப்பிரமணியன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நாகை மாவட்டச் செயலாளா் சுபாஷ் சந்திரபோஸ், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலாளா் கோவை. சுப்பிரமணியன், மாதா் சங்க மாவட்டப் பொருளாளா் சுபாதேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பொருளாளா் சுபாதேவி மற்றும் கட்சியின் நாகை,திருவாரூா் மாவட்ட நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT