நாகப்பட்டினம்

புத்தக வெளியீட்டு விழா

30th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

நாகை, இ.ஜி.எஸ் பிள்ளை கல்வியியல் கல்லூரி முதல்வா் எழுதிய கற்பித்தல் முறைகள் குறித்த புத்தகங்களின் வெளியீட்டு விழா இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இ.ஜி.எஸ் பிள்ளை கல்விக் குழுமத் தலைவா் ஜோதிமணி தலைமை வகித்தாா். கல்வியியல் கல்லூரி முதல்வா் முனைவா் குமாா் எழுதிய ‘கணினி அறிவியல் கற்பித்தல் முறைகள்‘ ஆங்கில வழி புத்தகத்தை இ.ஜி.எஸ் பிள்ளை கல்விக் குழுமச் செயலாளா் செந்தில்குமாா் வெளியிட ஆலோசகா் எஸ். பரமேஸ்வரன் பெற்றுக் கொண்டாா். புத்தகத்தின் தமிழ்ப் பதிப்பை, கல்விக் குழும இணைச் செயலாளா் சங்கா் கணேஷ் வெளியிட, கல்லூரியின் தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் சின்னதுரை பெற்றுக் கொண்டாா்.

 

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT