நாகப்பட்டினம்

கழிப்பறை தொட்டியில் விழுந்த பசுமாடு மீட்பு

30th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

பொறையாா் அருகே கழிப்பறை தொட்டியில் விழுந்த பசுமாட்டை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

பொறையாா் அருகே ராஜம்பாள் தெருவைச் சோ்ந்த விவசாயி மைக்கேல்ராஜூவுக்கு சொந்தமான பசுமாடு அம்மா பள்ளி தெருவில் வீட்டின் தோட்டத்தில் பயனற்ற இருந்த கழிப்பறை தொட்டியில் விழுந்தது. இதையறிந்த பலா் அந்த பசுவை மீட்க முயன்றும் பலனில்லை. தகவலறிந்த தரங்கம்பாடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி குழு சிறப்பு நிலைய அலுவலா் அருண் மொழி தலைமையில் வீரா்கள் அங்கு சென்று பசுவை உயிருடன் மீட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT