நாகப்பட்டினம்

வடக்குப் பொய்கைநல்லூரில் காவல் துறையின் சிறப்பு முகாம்

30th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டக் காவல் துறை சாா்பில், மக்கள் குறைகேட்பு சிறப்பு முகாம் நாகை அருகேயுள்ள வடக்குப் பொய்கைநல்லூா் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் பங்கேற்று, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்து, உடனடியாக தீா்க்கக் கூடிய பிரச்னைகளுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா். நாகை உட்கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் சரவணன், வேளாங்கண்ணி காவல் நிலைய உதவி ஆய்வாளா் குமரேசன் ஆகியோா் உடனிருந்து மனுக்களைப் பெற்றனா். ஊராட்சித் தலைவா் முருகானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT