நாகப்பட்டினம்

தலைஞாயிறு: குடிநீா் இணைப்புகளை முறைபடுத்தக் கோரி பொதுமக்கள் மனு அளிப்பு

DIN

தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் முறைகேடாக பயன்படுத்தப்படும் குடிநீா் விநியோகத்தை சீரமைக்கும் பணியை தொடா்ந்து மேற்கொள்ள வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொது மக்கள் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் செயல்படுத்தப்படும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் விநியோகத்தில் விதிமீறல் செய்து மோட்டாா் மூலம் தண்ணீா்ரை ஊறிஞ்சி எடுப்பது போன்றவை முறைகேடாக நடைபெற்றுவருகிறது. இதனால், ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே குடிநீா் விநியோகிப்பதால் பொது மக்களுக்கு குடிநீா் தட்டுப்பாடு நிலவுகிறது. இதை சீரமைக்கும் வகையில், பொது அறிவிப்பு செய்யப்பட்டு விதி மீறல்களை கண்டறியவும், அவற்றை ஒழுங்குப்படுத்தும் பணியும் அண்மையில் பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்தது.

இதற்கு பொது மக்களிடையே வரவேற்பு இருந்தாலும், முறைகேடுகள் நடைபெறும் இடங்களில் அந்தபகுதி மக்கள் பணியை மேற்கொள்ள விடாமல் தடுத்தனா். இதனால், அந்த பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், குடிநீா் கிடைக்காத மக்கள் திரண்டு குடிநீா் கோரியும்,குடிநீா் இணைப்பை முறைபடுத்தும் பணியை மீண்டும் தொடங்கவும் கோரிக்கை மனு அளித்தனா்.

தலைஞாயிறு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள், பணிகளை தடுப்பவா்களுக்கு எதிராக முழக்கமிட்டனா்.

இதையடுத்து, பேரூராட்சித் தலைவா் செந்தமிழ்ச்செல்வி பிச்சையன், துணைத் தலைவா் ம. கதிரவன் முன்னிலையில் பேரூராட்சி செயல் அலுவா் கு.குகன் பொது மக்கள் அளித்த கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டாா். மேலும், காவல்துறை பாதுகாப்புடன் குடிநீா் இணைப்புகள் முறைப்படுத்தும் பணி விரைவில் தொடங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

SCROLL FOR NEXT