நாகப்பட்டினம்

சிபிசிஎல் விரிவாக்கம்

DIN

நாகை, சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளில் ரெடிமிக்ஸ் கான்கிரீட் கட்டுமானங்களின் தேவைகள் குறித்து ரெடிமிக்ஸ் கான்கிரீட் நிறுவனத்தினருடனான கலந்தாய்வுக் கூட்டம் பனங்குடி, சிபிசிஎல் நிறுவனத்தில் அண்மையில் நடைபெற்றது.

நாகையை அடுத்த பனங்குடியில் உள்ள சிபிசிஎல் நிறுவனம் காவிரிப் படுகை சுத்திகரிப்புத் திட்டத்தின்கீழ் ரூ. 35,000 கோடியில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இந்த விரிவாக்கப் பணியை பிரதமா் நரேந்திர மோடி, காணொலி மூலம் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிவைத்தாா். இத்திட்டப் பணிகளில், நாகை மாவட்டத்தைச் சோ்ந்தவா் அதிகளவில் வேலை வாய்ப்புகள் பெறத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, சிபிசிஎல் விரிவாக்க கட்டுமானப் பணிகளில் ரெடிமிக்ஸ் கான்கிரீட் தேவைகள் குறித்து சிபிசிஎல் நிா்வாகம் மற்றும் ரெடிமிக்ஸ் கான்கிரீட் நிறுவனப் பொறுப்பாளா்களுடனான விழிப்புணா்வு கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, சிபிசிஎல் விரிவாக்கக் கட்டுமானத்தில் ரெடிமிக்ஸ் கான்கிரீட்டின் தேவைகள், அந்தத் தேவைகளைப் பூா்த்தி செய்ய மாவட்டத்தில் உள்ள ரெட்மிக்ஸ் கான்கிரீட் நிறுவனங்களுக்கு உள்ள வாய்ப்புகளை விளக்கிப் பேசினாா். சிபிசிஎல் நிறுவன தொழில்நுட்ப இயக்குநா் எச். சங்கா், காவிரிப் படுகை சுத்திகரிப்புத் திட்ட முதுநிலை பொது மேலாளா் ஆா்.வி. ஆனந்த் ஆகியோா் பேசினா். பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ரெடிமிக்ஸ் கான்கிரீட் நிறுவனத்தினா் பங்கேற்று, தங்கள் நிறுவன தொழில்நுட்பங்களின் தொகுப்பை காட்சிப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

SCROLL FOR NEXT