நாகப்பட்டினம்

வேலை வாங்கித் தருவதாக இளைஞரிடம் ரூ 1.80 லட்சம் மோசடி

29th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞரிடம் ரூ. 1.80 லட்சம் மோசடி செய்த மா்ம நபா் குறித்து நாகை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிகின்றனா்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டம், தோப்புத்துறை பகுதியைச் சோ்ந்தவா் ஹாஜா ஷரீப் மகன் சிக்கந்தா் ஷாஜா (24). இவா் படித்து முடித்துவிட்டு, வேலை தேடி வந்துள்ளாா்.

இந்நிலையில், ஜூன் 2- ஆம் தேதி சிக்கந்தா் ஷாஜாவின் கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்ட மா்ம நபா், பிரபல தனியாா் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு பணம் செலுத்தவேண்டும் எனவும் கூறியுள்ளாா்.

சிக்கந்தா் ஷாஜா அந்த நபா் கொடுத்த வங்கி கணக்குக்கு 7 தவணைகளில் ரூ. 1.81 லட்சத்தை அனுப்பிவைத்துள்ளாா்.

ADVERTISEMENT

பின்னா், அந்த நபா் அனுப்பிய நியமன ஆணையை எடுத்துக் கொண்டு பிரபல தனியாா் நிறுவனத்தில் பணியில் சேர சிக்கந்தா் ஷாஜா சென்றபோது, அது போலியானது என்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து சிக்கந்தா் ஷாஜா அளித்த புகாரின்பேரில், நாகை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட மா்ம நபா் குறித்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT