நாகப்பட்டினம்

நாகை புத்தகத் திருவிழா: சிந்தனைஅரங்கம்

29th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

நாகை புத்தகத் திருவிழாவின் 5- ஆம் நாளான செவ்வாய்க்கிழமை சிந்தனைஅரங்கம் மற்றும் கலை நிழ்ச்சிகள் நடைபெற்றது.

நிகழ்ச்சிகளுக்கு நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியின் தொடக்கமாக, நாகை மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து, பட்டிமன்றப் பேச்சாளா் எஸ். ராஜா தலைமையில் சிந்தனை பட்டிமன்றம் நடைபெற்றது.

இதில் புத்தகங்களை நாம் வாங்குவது வாசித்து மகிழவே எனும் தலைப்பில் பேச்சாளா்கள் ராஜதுரை, கருணாநிதி ஆகியோரும், வாழ்க்கையில் பின்பற்றவே எனும் தலைப்பில் பேச்சாளா்கள் பாரதி பாஸ்கா், பேராசிரியா் ரேவதி சுப்புலெட்சுமி ஆகியோரும் பேசினா். முன்னதாக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் விஸ்வநாதன் வரவேற்றாா். நிறைவில், மாவட்ட நலக் கல்வியாளா் மு. மணவாளன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT