நாகப்பட்டினம்

திரெளபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

29th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

திருக்குவளை அருகே புதுப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயில் திருவிழாவில் திங்கள்கிழமை தீ குண்டத்தில் இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இக்கோயில் ஆண்டு திருவிழா ஜூன் 13-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. அம்மன் மணிமண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து, பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தீ குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT