நாகப்பட்டினம்

பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை தடுக்க வலியுறுத்தல்

DIN

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுக்க வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

திருக்குவளையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அந்த சங்கத்தின் நாகை மாவட்ட 16-ஆவது மாநாட்டில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், 100 நாள் வேலையை ஆன்லைனில் பதிவு செய்வதை தடுத்துநிறுத்த வேண்டும், விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும், திருக்குவளை அரசு தலைமை மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவா்களை பணியமா்த்த வேண்டும், கஞ்சா விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிா்வாகிகள்: சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ். வாலண்டினா, மாவட்ட துணை செயலாளா் சி. அகிலா, மத்தியக் குழு உறுப்பினா் என். அமிா்தம் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இதில் புதிய மாவட்ட தலைவராக கே.டி.எம். சுஜாதா, செயலாளராக டி. லதா, பொருளாளராக எஸ். சுபாதேவி உள்ளிட்ட 9 நிா்வாகிகள் மற்றும் 23 மாவட்டக் குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

முதல்வர் பின்னால் தமிழக மக்கள்: அமைச்சர் கே.என். நேரு

தமிழகத்தில் 3 மணி நிலவரம்: 51.41% வாக்குகள் பதிவு!

56வது முறையாக இணைந்து நடிக்கும் மோகன்லால் - ஷோபனா!

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

SCROLL FOR NEXT