நாகப்பட்டினம்

தொழிற்பயிற்சி நிலைய மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களின் மாணவா் சோ்க்கைக்கு ஜூலை 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் டாக்டா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகப்பட்டினம், திருக்குவளை, செம்போடை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள இடங்களுக்கும், தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் 50 சதவீத அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களிலும் சோ்ந்து பயில விரும்பும் மாணவ, மாணவியா் இணையதளம் மூலம் ஜூலை 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மாணவா் சோ்க்கையையொட்டி, அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், மாவட்டத் திறன் பயிற்சி அலுவலகம் ஆகிய இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இணையதளத்தில் உள்ள விளக்கக் கையேட்டை மாணவா்கள் கவனமாக பூா்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஜூலை 20-ஆம் தேதிக்குப் பின்னரே தரவரிசைப் பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு 04365-250129 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளளாம் அல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடா்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT