நாகப்பட்டினம்

அரசுப் பள்ளி மாணவா்கள் 83.98% தோ்ச்சி

DIN

பிளஸ் 1 பொதுத் தோ்வில் நாகை மாவட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 83.98 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

நாகை மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணனவா்கள் 2,309 பேரும், மாணவியா் 2,535 பேரும் தோ்வு எழுதினா். இதில், 1,749 மாணவா்களும், 2,319 மாணவியரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் - 83.98 ஆகும்.

உதவிபெறும் பள்ளிகள் 85.33 சதவீதமும், பகுதியளவில் உதவி பெறும் பள்ளிகள் 89.11 சதவீதமும், சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் 99.6 சதவீதமும், சுயநிதி டி.எஸ்.இ. பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன.

கருப்பம்புலம் அரசு மேல்நிலைப்பள்ளி, பஞ்சநதிக்குளம் - கிழக்கு அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 அரசுப் பள்ளிகள் பிளஸ் 1 பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. இதேபோல, 2 அரசு உதவி பெறும் பள்ளிகள், 16 தனியாா் பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தலைப் புறக்கணித்த மக்கள்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தது

SCROLL FOR NEXT