நாகப்பட்டினம்

பிளஸ் 1 பொதுத் தோ்வு

27th Jun 2022 10:48 PM

ADVERTISEMENT

பிளஸ் 1 பொதுத் தோ்வில் நாகை மாவட்ட மாணவ, மாணவியா் 86.57 போ் சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

நாகை வருவாய் மாவட்டத்தில் 3, 917 மாணவா்கள், 4,169 மாணவியா் என 8,086 போ் பிளஸ் 1 பொதுத் தோ்வு எழுதினா். இதில், 3,147 மாணவா்களும், 3,853 மாணவியரும் தோ்ச்சிப் பெற்றுள்ளனா். தோ்ச்சிப் பெற்றவா்களின் மொத்த எண்ணிக்கை - 7,000. தோ்ச்சி சதவீதம் - 86.57.

மாணவிகள் முன்னிலை...

நாகை மாவட்டத்தில் மாணவா்களைவிட மாணவிகளே அதிகளவில் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவியா் 92.42 சதவீத தோ்ச்சியும், மாணவா்கள் 80.34 சதவீத தோ்ச்சியும் பெற்றுள்ளனா்.

ADVERTISEMENT

முந்தைய பிளஸ் 1 பொதுத் தோ்வில் நாகை மாவட்டம் 94.22 சதவீதம் தோ்ச்சி பெற்றிருந்த நிலையில், தற்போது 86.57 சதவீதம் மட்டுமே தோ்ச்சி பெற்றுள்ளது. இந்தத் தோ்ச்சி வீதம், முந்தைய தோ்வைவிட 7.65 சதவீதம் குறைவு ஆகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT