நாகப்பட்டினம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத் திட்ட உதவிகள்

27th Jun 2022 10:47 PM

ADVERTISEMENT

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 8 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், குறைகளுக்குத் தீா்வு கோரியும் பொதுமக்கள் 160 மனுக்களை அளித்திருந்தனா். அந்த மனுக்கள், தொடா்புடையத் துறைகளின் நடவடிக்கைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டன.

கூட்டத்தில், ஆட்சியா், தன் விருப்ப நிதி மூலம் பயனாளிகள் 3 பேருக்கு ரூ. 60 ஆயிரத்துக்கான காசோலைகள், திருநங்கைகள் 3 பேருக்கு அடையாள அட்டைகள், மாற்றுத்திறனாளிகள் 2 பேருக்கு மாதாந்திர உதவித் தொகை உத்தரவு ஆகியவற்றை வழங்கினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் கு. ராஜன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ. செல்வகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT