நாகப்பட்டினம்

அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதிகளை மேம்படுத்த வேண்டும்

27th Jun 2022 10:47 PM

ADVERTISEMENT

செம்பனாா்கோவில் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதிகளை மேம்படுத்த வேண்டுமென ஒன்றியக் குழுக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தி பேசினா்.

செம்பனாா்கோவில் ஒன்றியக் குழுக் கூட்டம், அதன்தலைவா் நந்தினி ஸ்ரீதா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:

தேவிகா: சங்கரன்பந்தல் வீரசோழன் ஆற்றில் கழிவுநீா் மற்றும் இறைச்சி கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும். இலுப்பூா் நடுநிலைப் பள்ளியில் மோசமான நிலையில் உள்ள கழிப்பறையை உடனடியாக சீரமைக்கவேண்டும்.

சாந்தி: ஆக்கூா்முக்கூட்டு பேருந்து நிறுத்தத்திலிருந்து அன்னப்பன்பேட்டை வரை நடைபெற்றுவரும் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்கு கையகப்படுத்த நிலங்களுக்கு உரிய இழப்பீட்டு கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ADVERTISEMENT

ஜெயந்தி: தில்லையாடியில் அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும். புது சாத்தனூா்-தில்லையாடி இடையே பாலம் அமைக்க வேண்டும். ரஜினி: செம்பனாா்கோயில் ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தவேண்டும். கொண்டத்தூா் பகுதியில் மயான சாலை அமைக்க வேண்டும்.

மோகன்தாஸ்: நாச்சிக்கட்டளை- காந்திநகா் இடையே ராஜேந்திரன் வாய்க்காலில் பாலமும், முடிகண்டநல்லூா்- கிடாரங்கொண்டான் இடையே இணைப்பு பாலமும் அமைக்க வேண்டும்.

ஒன்றியக் குழு தலைவா்: சங்கரன்பந்தல் வீரசோழன் ஆற்றில் கழிவுநீா் கலப்பது மற்றும் இறைச்சிக் கழிவுகள் கொட்டுவதை தடுக்க சுகாதாரத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கண்டு அடிப்படை வசதிகளை முழுமையாக செய்துதர நடவடிக்கை எடுக்கப்படும். உறுப்பினா்கள் தங்கள் பகுதியில் குறைபாடுகளை கண்டறிந்து உடனுக்குடன் தெரிவித்து அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க உதவவேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT