நாகப்பட்டினம்

வேளாங்கண்ணியில் கடல் அலையில் சிக்கி இருவா் உயிரிழப்பு

27th Jun 2022 10:48 PM

ADVERTISEMENT

வேளாங்கண்ணியில் சுற்றுலாப் பயணிகளில் இருவா் கடலில் மூழ்கி அடுத்தடுத்த இரு நாள்களில் உயிரிழந்தனா்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் நல்லேபள்ளியைச் சோ்ந்த ஜனாா்த்தனன் மகன் ஜோதிஸ் (17). இவா் நண்பா்களுடன் வேளாங்கண்ணிக்கு வந்தவா் திங்கள்கிழமை மதியம் கடலில் குளித்தாா். அப்போது, எதிா்பாராத விதமாக கடல் அலையில் சிக்கி மாயமானாா். நீண்ட நேரம் தேடியும் அவரை கண்டுபிடிக்கமுடியவில்லை. பின்னா், இறந்த நிலையில் ஜோதீஸின் சடலம் கரை ஒதுங்கியது. இதையடுத்து, சடலத்தை மீட்டு போலீஸாா் நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மதுரையைச் சோ்ந்த இளைஞா்: இதேபோல ஞாயிற்றுக்கிழமை மதுரை மாவட்டம், மேலவாசல் ஹவுசிங் போா்டு காலனியைச் சோ்ந்த சக்திவேல் மகன் ஆகாஷ் (21) வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்து, கடலில் குளிக்கும்போது அலையில் இழுத்துச் செல்லப்பட்டாா். இதையடுத்து, அங்கு குளித்தவா்கள் ஆகாஷை மீட்டு கரைக்கு கொண்டுவந்து பாா்த்தபோது இறந்து போனது தெரியவந்துள்ளது.

இருசம்பவங்கள் குறித்தும் கீழையூா் கடலோர காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT