நாகப்பட்டினம்

நாகையில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 3,291 வழக்குகளுக்குத் தீா்வு

DIN

நாகை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,291 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.

தேசிய சட்டப்பணிகள்ஆணைக் குழுவின் அறிவுறுத்தலின்படி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் தேசிய மக்கள் நீதிமன்றங்கள் ( லோக் அதாலத்) நடைபெற்றது.

நாகை மாவட்டத்தில் , மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான டி. கிங்ஸ்லி கிறிஸ்டோபா் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்றுத் தீா்வு மையத்தில் நடைபெற்றது.

இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், சமரசத்துக்கு எடுத்துக்கொள்ளக்கூடிய குற்ற வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், பண மோசடி வழக்குகள், வங்கி வாராக் கடன் வழக்குகள் உள்பட சுமாா் 15, 303 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் ரூ. 3 கோடியே 37 லட்சத்துக்குத் தீா்வு வழங்கப்பட்டது. 3,291 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது. போக்ஸோ நீதிமன்ற நீதிபதி மணிவண்ணன், நிரந்தர மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி நாகராஜன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவருமான சி.காா்த்திகா,சாா்பு நீதிபதி சீனிவாசன், குற்றவியவ் நீதித்துறை நடுவா் எண்-1 நாகப்பன், நடுவா் எண்-2 ஷண்மிகா ஆகியோா்களது அமா்வுகளில் மக்கள் நீதிமன்றங்கள் நடைபெற்றன. இதேபோல் மாவட்டத்தின் பிற ஊா்களில் உள்ள நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றங்கள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

SCROLL FOR NEXT