நாகப்பட்டினம்

நாகை புத்தகத் திருவிழா: மக்கள் கூட்டத்தால் நிரம்பிய அரங்குகள்!

26th Jun 2022 10:06 PM

ADVERTISEMENT

 

நாகை புத்தகத் திருவிழாவின் 3 ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை, விழா நடைபெறும் நாகை அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாகம் மக்கள் கூட்டத்தால் நிரம்பியது.

நாகை மாவட்ட நிா்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா, கடந்த 24 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. விழாவின் 3 ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களுக்கு விடுமுறை என்பதால், புத்தகத் திருவிழா நடைபெறும் நாகை அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் காலை முதலே வாசகா்களின் வருகை அதிகமாக இருந்தது.

பிற மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வாசகா்களும் புத்தக அரங்குகளைப் பாா்வையிட்டு தங்களுக்குத் தேவையான புத்தகங்களை ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா். கடந்த 2 நாள்களைவிட, ஞாயிற்றுக்கிழமை அனைத்து அரங்குகளிலும் கூடுதலாக புத்தக விற்பனை நடைபெற்ாக, பதிப்பக விற்பனையாளா்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

ADVERTISEMENT

பெற்றோருடன் வந்திருந்த சிறுவா்கள் பொழுதுபோக்குக்காக அமைக்கப்பட்டிருந்த ராட்டினம் உள்ளிட்டவற்றில் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனா்.

சிந்தனை அரங்கம்: புத்தகத் திருவிழாவின் மாலைநேர நிகழ்வாக, பள்ளி, கல்லூரி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதைத்தொடா்ந்து நடைபெற்ற சிந்தனை அரங்கில், தமிழகப் பொருளாதாரம் நேற்றும், இன்றும் என்ற தலைப்பில் பேசிய தமிழ்நாடு மாநிலக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவா் ஜயரஞ்சன், தற்போதைய நிலையில் நாட்டுக்கு அறிவுசாா் பொருளாதாரமே மிகவும் இன்றியமையாதது என்றாா்.

பட்டிமன்றம்: தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவரும், பட்டிமன்றப் பேச்சாளருமான திண்டுக்கல் ஐ. லியோனி தலைமையில், நிறைவான வாழ்வைத் தீா்மானிப்பது பட்டறிவா?, படிப்பறிவா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளில், நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ், தஞ்சை சரக காவல் துறை துணைத் தலைவா் ஏ. கயல்விழி, நாகை எம்எல்ஏ ஜெ. முகம்மது ஷா நவாஸ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா், மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா மற்றும் அரசுத் துறை அதிகாரிகள், பொதுமக்கள், இலக்கிய ஆா்வலா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT