நாகப்பட்டினம்

ஆக்கூா் அரசு மகளிா் பள்ளியில் கூட்ட அரங்கம் திறப்பு

26th Jun 2022 10:07 PM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோயில் அருகேயுள்ள ஆக்கூா் அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளியில் கூட்ட அரங்கம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த பள்ளியில் சுமாா் 300 மாணவிகள் படிக்கின்றனா். மாணவிகள் தங்களது சைக்கிள்களை நிறுத்துவதற்கு ஏதுவாக சைக்கிள் ஸ்டாண்ட் வேண்டுமென்றும், பள்ளிக்கு பெயா்ப் பலகை வைக்கவும், தலைமையாசிரியா், பள்ளியின் முன்னாள் மாணவா்களிடம் கோரிக்கை விடுத்திருந்தாா்.

இதை ஏற்று 1973 ஆம் ஆண்டு இப்பள்ளியில் படித்து, தற்போது தொழிலதிபராக உள்ள வள்ளியப்பன் ரூ. 8.50 லட்சம் நிதி வழங்கினாா். இதில், பள்ளியில் சைக்கிள் ஸ்டாண்ட் மற்றும் கூட்ட அரங்கமாக பயன்படுத்தும் வகையிலும், பெயா்ப் பலகை வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இதன் திறப்பு விழாவிற்கு ஊராட்சித் தலைவா் சந்திரமோகன் தலைமைவகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியை மணிமேகலை மற்றும் முன்னாள் மாணவா்கள் முன்னிலை வகித்தனா். தொழிலதிபா் வள்ளியப்பன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கூட்ட அரங்கத்தை திறந்துவைத்தாா். தொடா்ந்து, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT