நாகப்பட்டினம்

ஆதரவற்ற பெண்களுக்கு மாத உதவித்தொகை வழங்க வலியுறுத்தல்

26th Jun 2022 10:07 PM

ADVERTISEMENT

 

கைம்பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு மாத உதவித்தொகையாக ரூ. 1,500 வழங்க வலியுறுத்தி, விதவைப் பெண்கள் வாழ்வுரிமைச் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

உலக கைம்பெண்கள் தினத்தையொட்டி, விதவைப் பெண்கள் வாழ்வுரிமைச் சங்கம் சாா்பில் மாநில மாநாடு நாகை அவுரித்திடலில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

மாநாட்டுக்கு சங்கத்தின் நாகை மாவட்டத் தலைவா் ப. கஸ்தூரி தலைமை வகித்தாா். நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து மாநாட்டைதொடங்கிவைத்தாா். நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகம்மது ஷா நவாஸ் மாநாட்டில் பேசினாா்.

ADVERTISEMENT

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

கைம்பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ. 1,500 வழங்கவேண்டும், அரசின் வீடுகள் கட்டும் திட்டங்களில் கைம்பெண்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும், கைம்பெண்களுக்கு தனியாக நலத் துறை ஏற்படுத்த வேண்டும், வீடு இல்லாதவா்களுக்கு வீட்டுமனைப் பட்டா, கோயில் இடங்கள் மற்றும் புறம்போக்கு இடங்களில் வசிக்கும் கைம்பெண்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும், அரசு மற்றும் தனியாா் துறையில் கைம்பெண்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கவேண்டும், கைம்பெண்களின் வாரிசுகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க நாகை மாவட்டச் செயலாளா் டி. லதா, விதவைப் பெண்கள் மேம்பாட்டு திட்ட ஒருங்கிணைப்பாளா் ச. ஜெசி மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT