நாகப்பட்டினம்

இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலைதடுமாறி விழுந்தவா் பலி

26th Jun 2022 10:08 PM

ADVERTISEMENT

 

நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூா் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறிவிழுந்தவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கீழையூா் காவல் சரகம், திருப்பூண்டி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வேதரத்தினம் மகன் முருகானந்தம் (34). இவா், மணக்குடி பகுதியில் கோழிக்கடை வைத்துள்ளாா். கடந்த 24 ஆம் தேதி கடையை பூட்டிவீட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளாா். அப்போது திருமணங்குடி மதகடி கட்டைப் பகுதியில் நிலைதடுமாறி கீழே விழுந்துகிடந்துள்ளாா்.

அவரது மனைவி புவனேஸ்வரி மற்றும் உறவினா்கள் தேடிச் சென்று அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி முருகானந்தம் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கீழையூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT