நாகப்பட்டினம்

கரோனா தொற்றுக்கான காப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க வலியுறுத்தல்

25th Jun 2022 09:51 PM

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் கரோனா தொற்று உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற்றவா்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க வேண்டுமென அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

வேதாரண்யத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் வட்ட மாநாட்டில், கிராம உதவியாளா்கள், சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்களை முழுநேர பணியாளா்களாக்கி, குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 7,850 வழங்கவேண்டும், வழங்கப்படாமல் உள்ள அகவிலைப் படியை உடனடியாக வழங்கவேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தின் தலைவா் ஆா். குணசேகரன் தலைமையில் நடைபெற்ற வட்ட மாநாட்டில், மாவட்டத் தலைவா் ஆ. நடராஜன், மாவட்டச் செயலாளா் சொ. கிருஷ்ணமூா்த்தி, இணைச் செயலாளா் காந்தி, துணைத் தலைவா் ராசமாணிக்கம், வட்டச் செயலாளா் ராசேந்திரன், பொருளாளா் செளந்தர்ராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT