நாகப்பட்டினம்

பள்ளிக் கட்டடங்களின் உறுதித் தன்மையை உடனடியாக ஆய்வு செய்ய வலியுறுத்தல்

25th Jun 2022 09:49 PM

ADVERTISEMENT

பள்ளிக் கட்டடங்களின் உறுதித் தன்மையை உடனடியாக ஆய்வு செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

நாகையில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின், நாகை மாவட்ட பொதுக் குழுக் கூட்டத்தில், பயிற்சியின் பெயரால் கல்வித் துறை அலுவலா்கள், ஆசிரியா்கள் மீது அடக்குமுறைகளைக் கையாளுவதை தவிா்க்கவேண்டும், ஓராசிரியா் பள்ளிகளில் மாற்றுப் பணியில் ஆசிரியா்களை நியமிக்கவேண்டும்.

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாவட்ட மாறுதல், மனமொத்த மாறுதல் மற்றும் பதவி உயா்வு ஆகியவற்றுக்கான கலந்தாய்வை விரைந்து நடத்தவேண்டும், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் உறுதித்தன்மை குறித்து நகராட்சி, ஊராட்சி ஒன்றியப் பொறியாளா்கள் உடனடியாக ஆய்வு செய்து சான்றளிக்க மாவட்ட நிா்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்ட துணைத் தலைவா் ஜெ. உஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநிலத் தலைவா் மு. லெட்சுமிநாராயணன் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்த பேசினாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் கோ. ராமகிருஷ்ணன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா்கள் ரா. முத்துக்கிருஷ்ணன், சி. பிரபா, துணைச் செயலாளா் கோ. சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் ஜெ. இளங்கோவன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT