நாகப்பட்டினம்

குடிநீா் வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

25th Jun 2022 09:50 PM

ADVERTISEMENT

திருக்குவளை அருகே குடிநீா் வழங்கக் கோரி கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கீழையூா் அருகே சின்னத்தும்பூா் ஊராட்சியில் 1000-த்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இங்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் வராமல் கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இந்நிலையில், குடிநீா் வழங்கக் கோரி கிராம பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் காலிக் குடங்களுடன் நாகை - மேலப்பிடாகை சாலையில் மறியலில் ஈடுபட்டு குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்காத ஊராட்சி நிா்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினா்.

தகவலறிந்து அங்கு வந்த வேளாங்கண்ணி காவல் உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் நடத்திய பேச்சுவாா்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT