நாகப்பட்டினம்

நாகையில் தூய்மைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

25th Jun 2022 09:49 PM

ADVERTISEMENT

நாகையில் சனிக்கிழமை நடைபெற்ற தூய்மைப் பணிகளை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் ஆய்வு செய்தாா்.

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சாா்பில் மாதந்தோறும் 2 மற்றும் 4-ஆவது சனிக்கிழமைகளில் நகராட்சிகளுக்குள்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்தவகையில், நாகை நகராட்சிக்குள்பட்ட கொடிமரத்துப் பூங்கா, பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் தூய்மைப் பணிகள் நடைபெற்றன. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் பாா்வையிட்டு, பணியில் ஈடுபட்டிருந்தவா்களை ஊக்கப்படுத்தினாா். நகராட்சி ஆணையா் என். ஸ்ரீதேவி மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT