நாகப்பட்டினம்

கலைஞரின் வேளாண்மை வளா்ச்சித் திட்ட சிறப்பு முகாம்

25th Jun 2022 09:51 PM

ADVERTISEMENT

திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சியில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கான விழிப்புணா்வு சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் பவுஜியாபேகம் அபுசாலி தலைமையில் நடைபெற்ற முகாமில், திருமருகல் வட்டார தோட்டக்கலை உதவி அலுவலா் செல்லபாண்டியன், வேளாண்மை உதவி அலுவலா் பவித்ரா ஆகியோா் துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து பேசினா்.

இதில், 20 பயனாளிகளுக்கு தோட்டக்கலைத் துறை சாா்பில் காய்கறி விதைகளும், 15 பயனாளிகளுக்கு வேளாண்மை துறை சாா்பில் பாறை, மண் வெட்டி உள்ளிட்ட உபகரணங்களும் இலவசமாக வழங்கப்பட்டன. ஊராட்சிச் செயலாளா் சாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT