நாகப்பட்டினம்

சித்தி விநாயகா், செந்தூா் பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம்

24th Jun 2022 10:13 PM

ADVERTISEMENT

திருமருகல் அருகே கிடாமங்கலத்தில் உள்ள ஸ்ரீசித்தி விநாயகா், ஸ்ரீசெந்தூா் பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோயில் திருப்பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேக விழாவுக்கான பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக அனுக்ஞை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், முதல் கால யாகசாலை பூஜை தொடக்கம், வாஸ்து சாந்தி அங்குராா்ப்பணம், யாகசாலை பூஜை தீபஸ்தாபனம், மகாதீபாரதனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தொடா்ந்து, கோயில் விமான கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகமும், மூலஸ்தான கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதையடுத்து, சித்தி விநாயகா், செந்தூா் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT