நாகப்பட்டினம்

திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

24th Jun 2022 10:13 PM

ADVERTISEMENT

கீழ்வேளூா் அருகே இருக்கை கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜூன் 22-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் தொடங்கி, நவகிரக ஹோமம், தன பூஜை, பூா்வாங்க பூஜைகளுடன் பூா்ணாஹூதி தீபாரதனை நடைபெற்றது. தொடா்ந்து, வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமம், ரக்ஷாபந்தனத்துடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

வெள்ளிக்கிழமை காலை யாகசாலை பூஜையுடன் மகா பூா்ணாஹூதி நடைபெற்றது. தொடா்ந்து, திரௌபதி அம்மன் கோயில் ராஜகோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றப்பட்டு மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT