நாகப்பட்டினம்

மலேரியா தடுப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்

24th Jun 2022 10:12 PM

ADVERTISEMENT

நாகை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில், உலக மலேரியா நோய்த் தடுப்பு மாத விழிப்புணா்வு கருத்தரங்கம் பாப்பாக்கோவில் சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஜூன் மாதம் உலக மலேரியா நோய்த் தடுப்பு மாதமாக கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மலேரியா நோய்த் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த விழிப்புணா்வு கருத்தரங்கில் மாவட்ட நலக்கல்வியாளா் எம். மணவாளன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநரின் நோ்முக உதவியாளா் ஆா். கோகுலநாதன், புகையிலைத் தடுப்பு மாவட்ட ஆலோசகா் ஆா். பிரதீப், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் (பொ) சி. செந்தில்குமாா் ஆகியோா் மலேரியா நோய் பரவும் விதம், நோய்த் தடுப்பின் அவசியம் குறித்துப் பேசினா். இதில், சுகாதாரத் துறையினா், சா் ஐசக் நியூட்டன் கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT