நாகப்பட்டினம்

கன்னிகா பரமேஸ்வரி கோயில் குடமுழுக்கு

24th Jun 2022 10:13 PM

ADVERTISEMENT

பூம்புகாா் அருகே மேலையூா் மேலவெளியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் மகாமண்டபம் உள்ளிட்ட திருப்பணிகள் நிறைவடைந்தது குடமுழுக்குக்கான பூஜைகள் ஜூன் 22-ஆம்தேதி தொடங்கின. தொடா்ந்து நடைபெற்ற யாகசாலை பூஜையின் 4-ஆம் கால யாகசாலை பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பின்னா் பூா்ணாஹூதி செய்யப்பட்டு புனிதநீா் அடங்கிய குடங்கள் எடுத்துச்செல்லப்பட்டன. தொடா்ந்து, கோயில் விமான கலசங்களில் புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. இதையடுத்து, கன்னிகா பரமேஸ்வரிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT