நாகப்பட்டினம்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் பலி

24th Jun 2022 10:14 PM

ADVERTISEMENT

கீழையூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

கீழையூா் அருகே பிரதாபராமபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் 70 வயது மதிக்கத்தக்க முதியவா் மீது ஜூன் 22-ஆம் தேதி அடையாளம் தெரியாத வாகனம் மோதி அதே இடத்தில் உயிரிழந்து கிடந்தாா். அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து, கீழையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT