நாகப்பட்டினம்

பூசாரிகள் நலவாரியத்தை புதுப்பிக்க வலியுறுத்தல்

24th Jun 2022 10:12 PM

ADVERTISEMENT

பூசாரிகளின் நலவாரியத்தை புதுப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராமக் கோவில் பூசாரிகள் பேரமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்த அமைப்பின் நாகை மாவட்டக் கூட்டம், நாகையை அடுத்த மஞ்சக்கொல்லையில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் கே. மகாலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஏ. துரைராஜ் முன்னிலை வகித்தாா். மாநில நிா்வாகிகள் எஸ். ராஜா, ஏ. பாலசுப்பிரமணியன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

கூட்டத்தில், பூசாரிகள் நலவாரியத்தை புதுப்பிக்கவும், கிராமக் கோயில்களில் பணியாற்றும் பூசாரிகளுக்கு மாத ஊதியமாக ரூ. 10 ஆயிரம் வழங்கவேண்டும், கோயில் இடங்களிலியே பூசாரிகளுக்கு குடியிருப்புகளைஅமைத்துக்கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT