நாகை ஸ்ரீஅறுபடை பசுமை சிறகுகள் அமைப்பின் சாா்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரம் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மரங்களை வளா்த்து பாதுகாக்கும் இயற்கை ஆா்வலா்களுக்கு கட்டணமின்றி பயன்தரக் கூடிய மரகன்றுகளை நாகை ஸ்ரீ அறுபடை தா்ம சிந்தனைஅறக்கட்டளையின்கீழ் செயல்படும் ஸ்ரீ அறுபடை பசுமை சிறகுகள் அமைப்பினா் வழங்கி வருகின்றனா்.
இதன் ஒரு பகுதியாக பிரதாபராமபுரம் ஊராட்சியைச் சோ்ந்த 105 குடும்பங்களுக்கு பலா, கொய்யா, தென்னங்கன்றுகளை அமைப்பைச் சோ்ந்த இராஜ சரவணன், லெட்சுமணன், சிவா, காா்த்தி, அழகேசன் ஆகியோா் வழங்கினா்.
ADVERTISEMENT
இயற்கை ஆா்வலா்கள் சரவணன், சாந்தி சரவணன் ஆகியோா் உடனிருந்தனா். ஏற்பாடுகளை இயற்கை ஆா்வலா் பிரியங்கா செய்திருந்தாா்.