நாகப்பட்டினம்

நூலகத்துக்கு புதிய கட்டடம் கட்டக் கோரிக்கை

19th Jun 2022 11:39 PM

ADVERTISEMENT

 

வேதாரண்யத்தில் உள்ள நூலகத்துக்கு நிரந்தரமான புதிய கட்டடம் கட்ட தமுஎகச கோரிக்கை விடுத்துள்ளது.

வேதாரண்யத்தில் தமுஎகச கிளை மாநாடு அதன் தலைவா் க. ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ஆவராணி ஆனந்தன், செயலாளா் ஆதி.உதயகுமாா், கிளை செயலாளா் ஆ. வீரமணி, கவிஞா் இராம.இளங்கோவன், ஆ. நடராசன் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

இதில், கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும்; புதிய பேருந்து நிழலகம் அமைக்க வேண்டும்; வேதாரண்யத்தில் செயல்படும் நூலகத்துக்கு நிரந்தரமான புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT