நாகை பாப்பாக்கோவில் சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரி மாணவா்கள் 125 பேருக்கு பணி நியமன ஆணைகள் அண்மையில் வழங்கப்பட்டன.
சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரி இறுதியாண்டு மாணவா்களுக்கான வளாக நோ்காணல் நடைபெற்றது. இதில் ஜேபிஎம் ஆட்டோ லிமிடெட், என்சிஆா் எலக்ட்ரிக்கல் நிறுவனம், சக்தி ஆட்டோ லிமிடெட் நிறுவனம் தீவாஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, கல்லூரியில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் கணினி பிரிவில் பயின்ற மாணவா்கள் 125 பேரை தோ்வு செய்தனா்.
இதைத் தொடா்ந்து தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு முன்னணி நிறுவனத்தினரால் வழங்கப்பட்ட பணிநியமன ஆணைகளை, சா்ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் தாளாளா் த. ஆனந்த வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தாா். இந்நிகழ்ச்சியில், பொறியியல் கல்லூரி முதல் வா் ஜி. கிப்ட்சன் சாமுவேல், கல்லூரி வேலை வாய்ப்பு அலுவலா் நவநீதகிருஷ்ணன், நிா்வாக அலுவலா் மு. குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.