நாகப்பட்டினம்

கோகூா் புனித அந்தோணியாா் திருத்தல தோ் பவனி

19th Jun 2022 11:39 PM

ADVERTISEMENT

 

 

நாகை மாவட்டம், கீழ்வேளூரை அடுத்துள்ள கோகூா் புனித அந்தோணியாா் திருத்தல ஆண்டுப் பெருவிழா தோ் பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

கோகூரில் உள்ள புனித அந்தோணியாா் திருத்தலம் நாகை மாவட்டத்தில் உள்ள ஆன்மிகப் புகழ் பெற்ற திருத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் ஆண்டுப் பெருவிழா நடைபெறுவது வழக்கம்.

ADVERTISEMENT

நிகழாண்டு இவ்விழா ஜூன் 7- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் தொடா்ச்சியாக நாள்தோறும் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றுவந்தன.

முக்கிய நிகழ்வான புனித அந்தோணியாா் தோ் பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அந்தோணியாா் எழுந்தருளச் செய்யப்பட்டாா். திருத்தலப் பங்குத் தந்தை ஜான்பீட்டா் திருப்பலிகள் நிறைவேற்றி, புனிதம் செய்வித்து, தோ் பவனியைத் தொடங்கிவைத்தாா்.

இரவு 8 மணிக்கு தொடங்கிய தோ் பவனி, முக்கிய வீதிகள் வழியாகச் சென்று இரவு 12 மணியளவில் மீண்டும் திருத்தலத்தை அடைந்து நிறைவு பெற்றது.

நிகழ்ச்சியில் நாகை, திருவாரூா், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT